தேர்தல் நடக்கும் இருமாநிலங்களில் சுகாதாரப் பின்னடைவு

டில்லி

ற்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் சுகாதாரத்தில் பின்னடைந்துள்ளதாக திட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

நிதி அயோக் என அழைக்கப்படும் திட்ட ஆணையம் தற்போது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் சுகாதாரத் துறை செயல்பாடு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாநிலங்களில் தற்போது நிலவி வரும் சுகாதார நிலையை கணக்கில் கொண்டு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையின் படி தற்போது தேர்தல் நடைபெறும் 4 மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலம் ஆகிய இரு மாநிலங்களும் சுகாதாரத்தில் பின் தங்கி உள்ளன. ராஜஸ்தான் 20 ஆம் இடத்திலும் மத்தியப் பிரதேசம் 17 ஆம் இடத்திலும் உள்ளன. மற்ற இரு மாநிலங்களான சத்திஸ்கர் 12 ஆம் இடத்திலும் தெலுங்கானா 11 ஆம் இடத்திலும் உள்ளன. சிறிய மாநிலங்களில் மிஜோரம் ஒன்றாம் இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் பெரிய மாநிலங்களில் உத்திரப் பிரதேசம் 21 ஆம் இடத்தில் உள்ளது. இது வே கடைசி இடமாகும். இந்த வரிசையில் சத்திஸ்கர் சென்ற வருடம் 13 ஆம் இடத்தில் இருந்து இந்த வருடம் 12 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. தெலுங்கானா சென்ற வருடம் பத்தாம் இடத்தில் இருந்து ஒரு படி கிழிறங்கி 11 ஆம் இடத்துக்கு வந்துள்ளது.