கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என்று  மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளிக்கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்தில், அம்பான் புயல் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அங்கு ஜூன் 30ந்தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று  மேற்குவங்க கல்வித்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி  அறிவித்து உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில்  அம்பான்  புயல் தாக்குதலால் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.700 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்கள் இடிந்துள்ளன. வேறு பள்ளிக்கூடங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தனிமை முகாம்களாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் மூடியே இருக்கும் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏற்கனவே  ஜூன் 10-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.