சென்னை:
ங்கக்கடலில் உருவாகி வரும் அம்பான் புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதால், தமிழக துறைமுகங்களில் 1ம் கட்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வங்க கடலில் இன்று இரவு அம்பான் புயல் உருவாக உள்ள நிலையில், கடற்பகுதி உள்பட பல மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக வங்கக் கடல் பகுதியில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். புயலால் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும்.  வரும் 20ந்தேதி கரையை கடக்கும் என தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில்  நாகப்பட்டினம், பாம்பன், லாரிகள் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.