சாதாரண புயலைவிட 5 மடங்கு வலுவான வேகத்துடன் கரையை கடப்பதாக அறிவிக்கப்பட்ட அம்பான் புயல் இன்று மாலை 5 மணிக்கு மேல் ஒடிசா பாரதீப் பகுதி மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையில் இடி, மழை, சூறாவளியுடன் சீறிப்பாய்ந்து கரையை கடந்தது.
புயல் வீசும் காட்சிகள்அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

வங்க கடலில் உருவான அம்பான்  புயல், அதிதீவிர புயலாக மாறி சூப்பர் புயலாக வலுப்பெற்றது. ஒடிசா கடற்கரை மற்றும் மேற்குவங்கத்தில் இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது.
அதன்று இன்று மாலை  5 மணிக்கு மேல்   மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதால்  இடியுடன் கூடிய கனத்த மழை பொழிந்து வருகிறது. மேலும்,  150-160 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால், பல இடங்களில், மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன.
ஒடிசா மாநிலம், பாரதிப் பகுதியில் ஆம்பன் புயல் தாக்கம் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும், பல இடங்களில் வேருடன் மரங்கள் சாய்ந்து வரும் நிலையில், பல இடங்களில் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது.

இந்த புயல், மேற்கு வங்கத்தில் சுந்தரபான்ஸ் காடுகளை கடந்து, உட்பகுதியில் மாலை 7 மணிக்கு புயல் வலுஇழப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்கு வங்கத்தில் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகவும், ஒடிஷாவில் 1,58,640 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப் பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் தெரிவித்தார்.
அம்பான் புயலுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.