Random image

பழனி அருகே பயங்கரம்: ஜேசிபி மீது அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதல்

பழனி:

ழனி அருகே ஆளில்லா லெவல் கிராங்கில் வந்த ஜேசிபி மீது  அந்த வழியாக வேகமாக  அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி பழனி இடையே உள்ள ஆள் இல்லா கிராசிங்கில் அந்த பகுதியை சேர்ந்த  மணல் அள்ளும் எந்திரமான ஜேசிபி வந்தது. அப்போது அந்த வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து  வேகமாக வந்து கொண்டிருந்த அம்ரிதா எக்ஸ்பிரஸ் ஜேசிபி மீது மோதி தள்ளியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜேசிபி இயந்திரம் தண்டவாளம் சில மீட்டர் தூரத்தில் விழுந்தது. அதில் பயணம் செய்த டிரைவர் உள்பட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மோதல் காரணமாக ரெயிலின் இஞ்சின் மற்றும் 2 பெட்டிகள் சேதமடைந்தன.  அதைத்தொடர்ந்து மதுரை சென்ற அம்ரிதா எக்ஸ்பிரஸ் அங்கு 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இன்று காலை 10.45 மணி அளவில் இந்த

இதுகுறித்து ரெயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர.