அமிர்தரஸ் குண்டுவெடிப்பு – தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம்

அமிர்தரசில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

bom

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் நேற்று நடைபெற்ற மதபோதனை நிகழ்ச்சியின் போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இருசக்கர வாகத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டத்தினரை நோக்கி வெடிகுண்டுகளை வீசி சென்றனர். இந்த தாக்குதலில் 3 மதபோதகர்கள் உயிரிழதனர். 20க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து போலீசார் வெடிகுண்டு வீசியவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அப்படி தகவல் அளிப்பவர்கள் பஞ்சாப் மாநில காவல்துறையின் ஹெல்ப்லைன் எண் 181க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தகவல் அளிக்கும் நபர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்க ரகசியமாக வைக்கபடும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.