புதுடெல்லி:

அமுல் பால் விலை மே 21 முதல் லிட்டருக்கு 2 உயருகிறது.


அமுல் பிராண்ட் பெயரில் குஜராத் கூட்டுறவு பால் சொஸைட்டி பால் விற்பனை செய்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக அமுல் பால் விலை ஏற்றப்படாமல் இருந்தது.

இந்நிலையில், புதுடெல்லி, மகாராஷ்ட்ரா மற்றும் மற்ற மாநிலங்களில் மே 21 முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தைப் பொருத்தவரை, பசும் பால் விலையில் மாற்றமில்லை.

மாற்றியமைக்கப்பட்ட விலை உயர்வின்படி, அகமதாபாத்தில் அமுல் பால் லிட்டருக்கு ரூ.27-க்கும், அமுல் சக்தி ரூ.25-க்கும், அமுல் தாஜா ரூ.21-க்கும், அமுல் டைமன்ட் ரூ.28-க்கும் கிடைக்கும்.

உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதால், பால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.