உலகக் கோப்பை : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டீமை ஸ்பான்சர் செய்யும் அமுல் நிறுவனம்

னந்த்

பிரபல பால் பொருள் நிறுவனமான அமுல் நிறுவனம் உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஸ்பான்சர் செய்ய உள்ளது.

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 வரை நடக்க உள்ளன. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் மோதுகின்றன.

அமுல் நிறுவனம் பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பிரபல இந்திய நிறுவனமாகும். இந்த நிறுவனத்துக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிறுவன தொழிற்சாலை குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் அமைந்துள்ளது.

இன்று அமுல் நிறுவனம் தனது டிவிட்டரில், “அமுல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ல் ஆப்கானிஸ்தான் டீமுக்கு அதிகார பூர்வ ஸ்பான்சராக பங்கு கொள்ள உள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது” என பதிந்துள்ளது. இந்த செய்தியை பல கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டிஉள்ளனர்.

Photo courtesy : Amul Twitter page

Leave a Reply

Your email address will not be published.