எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்திய அமுல் நிறுவனம்….!

இந்தியாவில் நடைபெறும் சிறப்பான நிகழ்வுகளின் போது, அதனை கொண்டாடும் வகையில்/ சிறப்பிக்கும் வகையில் கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது அமுல் நிறுவனத்தின் வழக்கம்.

தற்போது அமுல் நிறுவனம் மறைந்த பாடகர் / நடிகர் எஸ்.பி.பி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

40,000+ பாடல்கள், எண்ணற்ற விருதுகள், நடிப்பு, எளிமையாக பழகும் குணம் என தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடகர் மற்றும் நடிகர் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறோம் என பதிவிட்டுள்ளனர்.

மேலும் தமிழில் மண்ணில் இந்த காதலின்றி யாருமின்றி பாடலையும் இந்தியில் வெளியிடும் போது, ஏக் துஜே கே லியே படத்தில் இடம் பெற்ற தேரே மேரே பீச் மேய்ன் பாடலையும் இந்த சித்திரங்களுக்கு பயன்படுத்தி தங்களுடைய அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.