Random image

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு : இந்திய நீதிபதி பெயர் நீக்கம்

வாஷிங்டன்

மெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு பட்டியலில் இந்திய வம்சாவளி நீதிபதியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க உச்சநீதிமன்றம் அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் இடம் பெற்றுள்ளது.  இங்கு பணி புரியும் 81 வயதான கென்னடி என்னும் நீதிபதி வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.    அதை ஒட்டி புதிய நீதிபதியை தேர்வு செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்திருந்தது.    இதற்காக பரிந்துரை செய்யப்பட்ட 25 நீதிபதிகளில் 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பேர்களில் இந்திய வம்சாவளையை சேர்ந்த அமுல் தாபர் என்பவரும் ஒருவர் ஆவர்.   இவர்க்ளிடம் கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேர்க்க்காணல் நடத்தினார்.   இதில் அமுல் தாபாரும் ஒருவர் ஆவார்.  49 வயதாகும் இவர் சின்சினாட்டி நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியில் உள்ளார்.

அனைவரும் இவருக்கு உச்சநீதிபதியாகும் வாய்ப்பு உள்ளதாக கருதி வந்தனர்.   இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகும் வாய்ப்பு அதிகம் உள்ள மூவரின் பெயர் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது.   அதில் அமுல் தாபர் பெயர் இடம் பெறவில்லை.   வரும் 9 ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதியின் பெயர டிரம்ப் அறிவிக்க உள்ளார்

அமுல் தாபர் ஏற்கனவே அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி நேர்காணலுக்கு சென்று பின் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.