’மதரசாப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் .

தற்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவருக்கும் இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காதலர் ஜார்ஜ் பனயாட்டோவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே கர்பமாகியுள்ளார் . குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது இவர்கள் ஒன்றாகவும், நெருக்கமாகவும் இருக்கும் புகைப்படங்களை எமி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மாடலிங்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.