’மதராஸ பட்டணம்’ படத்தை காதலனுக்கு திரையிட்டு காட்டிய எமி..

யக்குனர் ஏ.எல்.விஜய் டைரக்‌ஷனில் ஆர்யா ஹீரோவாக நடித்த படம் மதராஸ பட்டணம். இதில் லண்டனை சேர்ந்த எமி ஜாக்ஸன் ஹீரோயினாக அறிமுக மானார். இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இப்படத்தை தனது வருங்கால கணவர் ஜார்ஜ் பனயியோடுக்கும் மற்றும் குடும்பத்தி னருக்கும் திரையிட்டு காட்டினார்.


’மதராஸ பட்டணம்’ படத்தின் 10 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது நினைவுகளை பகிர்ந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருப்ப தாவது:
பிரகாசமான கண்கள், குதிரை வால் கூந்தல், குழந்தைத்தனமான முகம் இதுதான் அன்றைக்கு எனது தோற்றம். மற்றும் நம்பமுடியாத இந்தியாவை முதன்முறையாக பார்த்தேன். இரவு கழிந்து காலையில் எழுந்தபோது மதராஸ பட்டணம் என்ற என்ற ஒரு அழகான ஸ்கிரிப்ட்டை எனக்கு தந்தார் இயக்குனர். அந்த படத்துடன் எனது சினிமா பயணத்தைத் தொடங்கினேன். படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழு அனவருமே ஒரு குடும்பத் தினரை போல் இன்று வரை என்னால் உணர முடிகிறது. அது எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம். விஜய் அண்ணா (இயக்குனர் ஏ.எல்.விஜய் பட இயக்குனர்) எனக்கு வாழ்நாள் முழுவதுக்குமான பட வாய்ப்பாக இதனை அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு எமி ஜாக்ஸன் தெரிவித்தி ருக்கிறார்.