டில்லி:

என்-32 ரக விமானப்படை விமான விபத்தில்,  பலியான 13 பேரில் தமிழகத்தில் கோவையை சேர்ந்த வீரரும் பலியாகி உள்ள அதிர்ச்சி  தகவல் வெளியாகி உள்ளது.

டந்த 3ந்தேதி 13 பேரும் மாயமான இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது ஊர்ஜிதமானது. விமானப்பத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் அதில் பயணம் செய்த 13 பேரும் பலியானதாக உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த விமான விபத்தில் கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுஅவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் கடந்த 3-ம் தேதி அருணாசலப் பிரதேசத்துக்கு புறப்பட்டது.  புறப்பட்ட சிறிது நேரத்தில் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டநிலையில், விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. சுமார் 1 வார காலத்திற்கு பிறகு, விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாசலப் பிரதேச மாநிலம் லிபோ என்ற இடத்திற்கு 16 கிலோ மீட்டர் வடக்கே அடர்ந்த மலைப்பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களையும், கருப்புப் பெட்டியையும் இந்திய விமானப்படையினர் மீட்டனர். இந்நிலையில், விமான விபத்தில் கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வினோத் ஹரிஹரன், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்துள்ள நிலையில், அதனை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர், விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரில் 5 பேர் பொது மக்கள் என விமானப் படை தெரிவித்துள்ளது. கருப்புப் பெட்டி மற்றும் 13 உடல்கள் தனி விமானம் மூலம் மாநில தலைநகருக்கு கொண்டு வரப்படுகிறது.