பத்திரிக்கை.காம் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி திருநாளில் உங்கள் குடும்பத்தினருடன் ஆரோக்கியத்துடன் நலமாக கொண்டாடவும் எனது வாழ்த்துக்கள்

இத்தீபாவளியில்  தீ காயம் ஏற்படாமல் பட்டாசுகளை வெடிக்க நாம் செய்யவேண்டியவை

1.பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கவேண்டும்.
2.பட்டாசுக்கு நெருப்பு வைத்தவுடன் நீங்கள் விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு வரும் வந்துவிடவேண்டும்.
3.வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து பார்க்கக்கூடாது. ஒரு பட்டாசுக்கு ஒரு முறை மட்டுமே தீ வைக்கவேண்டும்.
4.பட்டாசுகளை கொளுத்த ஊதுபத்தி போதும்.
5.சங்கு சக்கரங்கள், புருசுகள் , ராக்கெட்டுகள் கொழுத்தும்போது மிகவும் கவனமாக சம தளத்தில் வைத்து பாதுகாப்பாக கையாளவேண்டும்.
6. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்களை அருகில் வைத்துக்கொண்டு வெடிக்கவேண்டும்

7.பட்டாசு வைக்கும் இடத்தில் முதல் உதவிப்பெட்டி மருந்துகள் இருக்கவேண்டும்.
8.தண்ணீர் வாளி மற்றும் மணல் தொட்டி இவைகள் அருகில் இருப்பது நன்று.
9.தீக்காயம் ஏற்பட்டால் கம்பளி போர்வையால் மூடியோ அல்லது தண்ணீரை ஊற்றி முதல் உதவி செய்யவேண்டும்.தீ்ப்புண்களை நாமே கீறக்கூடாது. மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறவேண்டும்.

10.கண்ணுக்கு கண்ணாடி மற்றும் கால்களுக்கு செருப்பு/ஷீ அணிந்து பட்டாசு வெடிப்பது சிறப்பு

தவிர்க்க வேண்டியது

1.ராக்கெட் போன்றவை பாட்டிலில் வைத்தும், சமதளதத்தில் வைத்து   கொளுத்தக்கூடாது.பட்டாசைக் கையில் கொளுத்தக்கூடாது.
2.பட்டாடை,  பாலிஸ்டர், நைலான் போன்ற ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக்கூடாது.
3.வீட்டின் உட்புறத்தில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
4.பட்டாசுகள் மொத்தமக இருக்குமிடத்தில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
5. பட்டாசு வெடித்த கையோடு உணவு மற்றும் தின்பண்டங்கள் உண்ணக்கூடாது. இவ்விசயத்தில் குழந்தைகளிடத்தில் பெரியவர்கள் கவனமாக இருக்கவேண்டும்
6.குழந்தைகளுக்கு மத்தாப்பு போன்ற சிறிய வெடிப்பொருட்களை வாங்கிக்கொடுத்தல் நலம்
7.மின்சாதனங்கள், யுபிஎஸ், ஜெனரேட்டர்,உயர்மின் அழுத்த கோபுரங்கள் இருக்குமிடத்தில் பட்டாசுப்பொருட்களை வைக்கக்கூடாது.

8.மருத்துவரின் முறையான ஆலோசனையின்றீ தீக்காயங்கள் நீங்கள் கையாளக்கூடாது. ஒருவேளை மருத்துவர் ஆலோசனை அதிகமா நேரமாக இருந்தால் silver sulfadiazine cream என்ற மேற்பூச்சு மருந்தினை தடவலாம்

9. எங்கேனும் தீப்பிடித்தால் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் சொல்லவேண்டும், தீக்காயம் ஏற்பட்டால் தீவிர சிகிச்சைத்தேவைப்பட்டால் 108 வாகனத்தினை அழைக்கலாம். மேலும் மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படின் 104 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்

விபத்தில் தீபாவளியைக்கொண்டாடுவோம்

மருத்துவர்  பாலாஜி கனகசபை,MBBS, PhD (Yoga)
அரசு மருத்துவர்
99429 22002
கல்லாவி
கிருஷ்ணகிரி மாவட்டம்