5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள   ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கனமழை, வெள்ளபாதிப்புகளை தடுக்க தமிழக அரசு  முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆறுகள், குளங்கள் தூர் வாரப்பட்டு வரும் நிலையில், தற்போது பெய்த கனமழையால் மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இந் நிலையில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிகம பாதிக்கப்படும் பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள ரு.111.46 கோடியை  தமிழக அரசு ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அந்த அரசாணையில், ‘பேரிடர் மேலாண்மை – பொதுத்துறை (நீர்வளத் துறை) நீண்டகால வெள்ளத் தணிப்பு பணிகள் மூலம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நீண்ட கால வெள்ளத் தணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பணிகளுக்கு ரூ .111.46 கோடி அனுமதி மற்றும் ஆணைகள் வழங்கப்பட்டன.என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.