47ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த மோதிரம் மீண்டும் கிடைத்த அதிசயம்!

மெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 1973ம் ஆண்டு தனது பள்ளிப்பருவத்தின்போது, பின்லாந்து அருகே உள்ள மைனே காட்டுப்பகுதியில் தனது மோதிரத்தை தொலைத்திருந்தார்.  அந்த மோதிரம் தற்போது உலோக கண்டு பிடிப்பாளர் ஒருவரால்  கண்டெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது 63 வயதாகும் டெப்ரா மெகன்னா என்ற பெண்மணி உயர்நிலைப் பள்ளி மாணவியாக இருந்தபோது, போர்ட்லேண்டில்ஃபின்னிஷ் பூங்காவில் 20 செ.மீ அளவிலான  மோதிரத்தை தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது மண்ணின் கீழ் புதைக்கப்பட்டதை அந்த மோதிரை உலோகக் கண்டுபிடிப்பாளர் ஒருவர் கண்டுபிடித்து, அதிலுள்ள அடையாளத்தின் மூலம் விவரம் சேகரித்து அனுப்பி வைத்துள்ளார்.

இந்த மோதிரத்தை மீண்டும் பெற்ற டெப்ரா மெகன்னா, தான் இந்த மோதிரத்தை மறந்து விட்டதாக தெரிவித்திருப் பதுடன், கடந்த வாரம்  பிரன்சுவிக் நகரில் உள்ள தனது வீட்டிற்கு அஞ்சலில் மோதிரம் வந்தபோது, தனக்கு அழுகை வந்துவிட்டது என்று தெரிவித்து உள்ளார். இந்த மோதிரம்  மறைந்த தனது  கணவர் ஷானுக்கு சொந்தமானது, அவர் எனக்கு தந்தார் என்ற மெக்ன்னா, தனது மலரும் நினைவுகளை தெரிவித்து உள்ளார்.

தானும்,  ஷானும் , உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி முழுவதும் சேர்ந்தே படித்து வந்ததாகவும், பின்னர் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம் என்று தெரிவித்துள்ளவர்,  கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பு ஷான் தனக்கு அந்த மோதிரத்தை கொடுத்தார் என்று தெரிவித்து உள்ளவர், நாங்கள் இருவரும் தம்பதிகளாக 40 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தோம், ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் கடந்த 2017ம் ஆண்டு மரணமடைந்து விட்டார் என்று கண்ணீருடன் தெரிவித்து உள்ளார்.

தற்போது 47ஆண்டுகளுக்கு பிறகு அந்த மோதிரம் கிடைத்திருப்பது தனக்கு சந்தோஷத்தையும், அழுகையையும் தருகிறது என்றவர்,  உலகில் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இந்த மோதிரம் எங்கு கிடைத்தது, அது எப்படி உரியவரிடம் சென்றது என்பது குறித்து சுவாரஸ்யமான செய்திகள் வெளியாகி உள்ளது. அதில், குறிப்பிட்டுள்ள அந்த ஃபின்னிஷ் பூங்காவில் ஜனவரி மாதம் மெட்டல் டிடெக்டர்  மார்கோ சாரினென் என்பவர் மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, அந்த மோதிரம் கிடைத்ததாகவும், அதில் உள்ள குறிப்பைக் கொண்டு, அதன் உரிமையாளரை கண்டுபிடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த மோதிரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த,”மோர்ஸ் உயர்நிலைப்பள்ளி” என்று அச்சு மூலம், அந்த பள்ளி குறித்து விசாரித்து அறிந்ததாகவும்,  பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தைத் தொடர்பு கொண்டு விசாரணை செய்தபோது, அந்த மோதிரத்தில் இருந்த “எஸ் எம்” என்ற குறிப்பை வைத்து, அது ஷான் என்பவருக்கு உரிமையானது, அது 1973ம் ஆண்டையது  என்பதும் தெரிய வந்தது என்று சாரினென்  தெரிவித்து உள்ளார்.

இதைக்கொண்டு ஷான் தற்போது வசித்து வரும் விவரம் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது முகவரிக்கு, அந்த மோதிரத்தை தபால் மூலம் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

47 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த மோதிரம் மீண்டும் கிடைத்திருப்பது டெப்ரா மெகன்னாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.