பாதிரிகள் பலி ஆடுகள் : பொய் குற்றம் சாட்டும் பெண்கள் : தேவாலய பத்திரிகை

திருவனந்தபுரம்

பாதிரிகள் பலி ஆடுகள் எனவும்  அவர்கள் மீது பலாதார குற்றச்சாட்டுகளை கூறும் பெண்கள் பொய்யர்கள் எனவும் தேவாலய கூட்டு அறிக்கை கூறுகிறது.

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு முன்பு ஒரு பாதிரியாருடன் உறவு வைத்திருந்ததை பாவமன்னிப்பில் தெரிவித்து இருந்தார்.   அதை கேட்ட பாதிரியார் அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.   அந்த நிகழ்வை வீடியோவாக்கி அவர் மேலும் சில பாதிரிகளுடன் பகிர்ந்துக் கொண்டார்.   அவர்களும் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தனர்.

இந்நிகழ்வு நாடெங்கும் பரபரப்பான வேளையில் கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பேராயர் ஒருவர் 13 முறை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துளார்.   அது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.   விசாரணையில் அந்த பேராயர் அந்த பெண்ணையும் மற்றும் அவர் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதும் வெளி வந்துள்ளது.

இது குறித்து கத்தோலிக்க கிறித்துவர்கள் அமைப்பு நடத்தும் ஒரு வாரப் பத்திரிகையில் இது குறித்து செய்திக் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.  பிலிப் என்பவர் எழுதி உள்ள அந்தக் கட்டுரையில் பாதிப்புக்குள்ளாகும் பாதிக்கப்பட்டவர் என்னும் தலைப்பில் பாதிரிகளின் செயல்களை நியாயப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த செய்தி கட்டுரையில். “பலாத்கார குற்றங்கள் தொடர்வதாக கூறுவது தவறானது.   இது வரை இரு பலாத்கார குற்றங்கள் பதிவாகி உள்ளன.   அதிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் இறை தூதரின் வழி வந்தவர்கள்  ஆவார்கள்.  ஒரு பெண் தன்னை பாவமன்னிப்பின் போது கூறிய தகவலை வைத்து தன்னை பலர் பலாத்காரம் கூறியதாக கூறுகிறார்.   இது  பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

அவர் உண்மையிலேயே விருப்பத்துக்கு மாறாக பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக கணவரிடம் கூறி இருப்பார்.   ஆனால் கணவருடைய டெபிட் கார்டை அவர் பாதிரியின் செலவுக்கு அளித்ததால் இந்த விவரம் வெளி வந்ததாக கூறி உள்ளார்.   அதாவது டெபிட் கார்ட் விவகாரம் வெளி வரவில்லை எனில் அவர் தனது கணவரிடம் எதையுமே கூறி இருக்க மாட்டார்.   அத்துடன் அவர் கூறியது போல மேலும் பல பாதிரிகள் தன்னை பலாத்காரம் செய்ய அனுமதித்திருப்பார்.

அடுத்த புகாரான பேராயர் குறித்த புகாரும் தவறானதாகும்.   அந்தப் பெண் மதர் சூப்பிரியராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.   அதனால் இவ்வாறு பழி சுமத்துகிறார்.    அவர் கூறியதை ஒரு வாதத்துக்கு உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் அவரை ஒருவர் 13 முறை பலாத்காரம் செய்ய எப்படி அனுமதித்தார்?  அவர் எதிர்த்து எதுவும் கேட்காமல்,  ஒன்று இரண்டு மூன்று என 13 வரை எண்ணிக் கொண்டிருந்தாரா?

பேராயர் உண்மையில் தவறு செய்திருந்தால் அவரை தண்டிக்க வேண்டும்.  ஆனால் அப்படி இல்லை எனில் இந்தப் பெண்ணை என்ன செய்வது?    நான் பலாத்கார குற்றத்தை ஆதரிப்பவன் இல்லை.  அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.  அதை நானும் கூறுகிறேன்.   ஆனால் ஒரு பெண் ஒருவரை தனது ஆசைக்கு பயன்படுத்தி விட்டு மாட்டும் போது மற்றவரை பலி ஆடுகள் ஆக்கி பொய்யாக பலாத்கார குற்றம் சாட்டுவதை நான் ஆதரிக்க மாட்டேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி