யாழ்ப்பாணம்

ன்று யாழ்ப்பாண உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது,  இதனால் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து  அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

இன்று யாழ்ப்பாணம் மாவட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடை பெற்றது.   இது குறித்த தகவல்கள் பின் வருமாறு :

யாழ் மாவட்டம், நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் சென்று கொண்டிருந்தது.   அவருக்குப் பாதுகாப்பாக இரண்டு சார்ஜண்ட்கள் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில்  அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது  அந்த நெரிசலை கட்டுப்படுத்த ஒரு சார்ஜண்ட் சென்றுள்ளார். அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நபர், யாரும் எதிர்பாராமல் சார்ஜண்டின் இடுப்பிலிருந்த கைத் துப்பாக்கியினை உருவி எடுத்துள்ளார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த நீதிபதி இளஞ்செழியன் உடனடியாக சத்தம் போட்டுள்ளார். அதற்குள் அந்த நபர் சார்ஜண்ட் மீது தாக்குதல் மேற்கொண்டார்.   அதில் சார்ஜனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

நீதிபதி அதைக் கண்டு பதறிப் போய் வாகனத்தைவிட்டு இறங்கினார்.  அந்த நபர் நீதிபதியை பார்த்து துப்பாக்கியை குறி வைத்துள்ளார். அந்த நேரத்தில் மற்றொரு பாதுகாவலர் மீது மர்ம நபர் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்.   இதனையடுத்து  அந்த மர்ம நபர் அருகிலிருந்த ஒரு  கூல்பார் பக்கமாக ஓடிச்சென்று அங்கிருந்த வாகனம் ஒன்றில் ஏறித் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நீதிபதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தாக்குதல்கள் குறித்து கருத்து வெளியிடும் சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது:

“நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்டது எல்லோரும் நினைப்பது போல், மிகச் சாதாரணமான தாக்குதல் இல்லை.  இது மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதாரண நபரினால் ஒரு கைத்துப்பாக்கியினை காவலரிடம் இருந்து  எடுக்கவோ இயக்கவோ முடியாது.  துப்பாக்கிகளை இயக்கிப் பழகியதில் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதில் அனுபவம் கொண்ட நபரினால் மட்டுமே இதனை செய்ய முடியும். எனவே இதன் பின்னணியில் மிகப் பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

சமீபத்தில் நிகழ்ந்தா புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்வதற்கு, உதவி வழங்கிய நிகழ்வில் லலித் ஜயசிங்கா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலியல் பலாத்காரங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நீதிபதி இளஞ்செழியன் தீவிர நடவடிக்கை எடுத்த வருகின்றார்.

இந்நிலையில் தான் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே இந்த தாக்குதலுக்கும், மேலே குறிப்பிடப்பட்டவைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது“ என குற்றம் சாட்டியுள்ளனர்.