ஆஸ்திரேலியாவில் ஒரு அணியின் கிரிக்கெட் சாதனை

ஸ்திரேலியா

ஸ்திரேலியாவில் ஒரு பெண்கள் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 596 ரன்கள் எடுத்து எதிரணியை 25 ரன்களில் ஆல் அவுட் ஆக்கி சாதனை புரிந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டில் பல கிரிக்கெட் அணிகள் உள்ளன. அந்த அணிகளில் ஒன்று வடக்கு மாவட்ட பெண்கள் அணி ஆகும். இந்த பெண்கள் அணி வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலிய நாட்டில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்த அணி சமீபத்தில் தனது ஒரு நாள் போட்டியை போர்ட் அடிலெய்ட் அணியுடன் விளையாடியது.

வடக்கு மாவட்ட பெண்கள் அணி ஆரம்பத்தில் இருந்தே ரன்களை குவித்து வந்தது. விக்கட்டுகளை வீழ்த்த எதிரணியான போர்ட் அடிலெய்ட் அணி முடிந்த வரை விக்கெட்டுகளை வீழ்த்த கடுமையாக முயன்றது. ஆயினும் வடக்கு மாவட்ட பெண்கள் அணி 50 ஓவர்களில் 3 விக்கட் இழப்புக்கு 596 ரன்கள் எடுத்தது.

அடுத்து களம் இறங்கிய போர்ட் அடிலெய்ட் அணி எவ்வளவோ முயன்றும் வடக்கு மாவட்ட பெண்கள் அணி பந்து வீச்சில் விக்கட்டுகள் மள மள என சரிந்தன. போர்ட் அடிலெய்ட் அணி 10.5 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

அதை ஒட்டி வடக்கு மாவட்ட பெண்கள் அணி 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் சரித்திரத்தில் ஒரு மாபெரும் சாதனை ஆகும்.

கார்ட்டூன் கேலரி