சிறந்த பிரிட்டன் வாழ் இந்தியராக 8 வயது சிறுவன் தேர்வு

லண்டன்:

பிரிட்டன் வாழ் இந்திய வம்சாவளி சிறுவன் ஈஸ்வர் சர்மா. 8 வயதாகும் இச்சிறுவனுக்கு கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற ‘‘உலக மாணவர்கள் விளையாட்டு 2018’ போட்டியில் -வெற்றி பெற்றான்.

இதன் மூலம் பிரிட்டனுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. துருக்கியில் கடந்த மே மாதம் நடந்த ஆசிய யோகா சாம்பியன் போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளான். பிரிட்டனில் நடந்த 11 வயதினருக்கான தேசிய யோகா போட்டியில் ஈஸ்வர் சர்மா சாம்பியன் பட்டம் வென்றான்.

பிர்மிங்காமில் நடந்த இளம் சாதனையாளர்களுக்கான 6-வது விருது வழங்கும் விழாவில் சிறந்த பிரிட்டன் வாழ் இந்தியராக ஈஸ்வர் சர்மா தேர்வு செய்யப்பட்டான். இதுகுறித்து பேசிய சிறுவன் ஈஸ்வர் கூறுகையில், ‘‘எனக்கு என்னையே போட்டியாளராக நினைத்துக்கொண்டு செயல்பட்டதால் எத்தகைய கடினமான ஆசனமாக இருந்தாலும் என்னை அதை எளிதில் செய்ய முடிந்தது’’ என்றான்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed