அடிக்கடி கையை கழுவினால் தொற்றுநோய் பரவாது: அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

சென்னை:

கையை அடிக்கடி கழுவினால் தொற்றுநோய் பரவாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை கூறி உள்ளார்.

தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல்கள் மற்றும் வைரஸ் காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் காரணமாக மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பரவி வரும்  டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் விடுமுறையின்றி பணியாற்றி வருகின்றனர், டெங்கு பரவாமல் தடுக்கப்பட்டு உள்ளது எற்ர்.

பன்றிக் காய்ச்சல் வந்த பிறகு மருந்து எடுத்துக் கொள்ளாமல் இருந்து, வேறு பிற பாதிப்புகளும் இருக்கும்பட்சத்தில்தான் மரணம் நேரிட வாய்ப்பு உண்டு என்று கூறிய அமைச்சர்,  காலநிலை மாற்றத்தால் காய்ச்சல்கள் பரவுகிறது என்றும், இவை கொள்ளை நோயோ கொடிய நோயோ அல்ல என்று விளக்கமளித்தார்.

காய்ச்சல் வந்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும், தற்போது வைரஸ் காய்ச்சல் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும், பொதுமக்கள் அடிக்கடி தங்களது கைகளை நல்ல தண்ணீரால் கழுவினால் பெரும்பாலான தொற்றுநோய்கள் பரவாது என்றும், வெளியே சென்று வந்தால் கைகழுவும் பழக்கத்தை அனைவரும் பின்பற்றி நோய்த்தொற்றிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: An epidemic would not spread if washed your hands frequently: Minister Vijaya Baskar suggested, அடிக்கடி கையை கழுவினால் தொற்றுநோய் பரவாது: அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை
-=-