ஐதராபாத்:

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவை தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக 443 பேர் போட்டியிடுகின்றனர். நிஜாமாபாத் தொகுதியில் மட்டும் 185 பேர் போட்டியிடுகின்றனர்.

ஏராளமான விவசாயிகள் சுயேட்சைகளாக இங்கு போட்டியிடுவதால், வாக்குப் பதிவு இயந்திரங்ளை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் மட்டும் இடம்பெற முடியும்.

இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷியிடம் கேட்டபோது, கடந்த 2010-ம் ஆண்டு இதே தொகுதியில் 64 பேர் போட்டியிட்டபோது, வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு 384 பேர் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டது. ஒரு இயந்திரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல்படும் என்றார்.