இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாது: விமானி உயிர் தப்பினார்

லக்னோ:

ந்திய விமானப்படைக்கு சொந்தமான மைக்ரோலைட்  விமானம் விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இன்று காலை  உத்திரபிரதேச மாநிலம் பாகப்பட் அருகே இந்திய விமானப்படையின் மைக்ரோலைட் விமானம் அங்குள்ள விவசாய பகுதிக்குள் இறங்கி  விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபத்துக்கான காரணம் எந்திரக் கோளாறாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் அவ்வப்போது இயந்திரம் பழுது காரணமாக விபத்துக்குள்ளாகி வருகிறது. சமீபத்தில்  செப்டம்பர் 4ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய விமானப்படையின் மிக்27 வகைப் போர்விமானம் விபத்துக்குள்ளானது.  அதுபோல கடந்த 1ந்தேதி சென்னை அரக்கோணம் ராஜாளி விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட சேட்டக் ரக ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளாது குறிப்பிடத்தக்கது.