சிங்கப்பூர்: உச்சநீதிமன்ற நீதித்துறை ஆணையராக இந்தியர் நியமனம்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் வக்கீல் டேடர் சிங் கில். கடந்த 30 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறார். 59 வயதான இவர் சிங்கப்பூர் உச்சநீதிமன்ற நீதித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2 ஆண்டுகள் இந்த பதவியில் இருக்கபோகும் இவர் ஆகஸ்ட் 3-ம் தேதி பொறுப்பேற்கிறார். ஆசிய காப்புரிமை வக்கீல்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான இவர் காப்புரிமை ஆணைய துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.