இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் கொலை

லண்டன்:

வடக்கு இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் பகுதியை சேர்ந்தவர் ஜெசிகா பட்டேல் (வயது 34). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது கணவர் மிதேஷ் (வயது 36).

இருவரும் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைகழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் மருந்து கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஜெசிகா தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.