சென்னை,
றைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த அப்பல்லோ மருத்துவமனையின் செவிலியர்கள், தங்களது அனுபவம் குறித்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு அன்பார்ந்த, அறிவார்ந்த தோழியின் இழப்பு போலவே முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு எங்களுக்கு தோன்றுகிறது என்று கூறினர்.

மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  இரண்டு மாதங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில், இருந்தபொழுது, அவரின் இதுவரை காணாத மற்றொரு பக்கத்தை காண நேர்ந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள்  மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் அனைவரையும் தனது அறிவுக்கூர்மை, நகைச்சுவை மற்றும் கனிவினால் அவர் கிறங்கடித்தார்.
73  நாட்கள் அவருடன் இருந்து, அவருக்கு தேவையானவற்றை செய்து வந்த மருத்துவமனை  ஊழியர்கள், எல்லா நோயாளிகளை யும் போல அவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே நினைத்தனர்.
ஆனால், கடந்த இரண்டு மாதமாக ஒருவித பரபரப்புடன் கழிந்த வேலை, அவர் இறந்த மறுநாள்  மருத்துவமனைக்கு திரும்பிய அவர்களுக்கு, அவர் இல்லாத மருத்துவமனை எதையோ இழந்து நிற்பது போல் தோன்றியது.
16 நர்ஸ்கள், ஒருவருக்கு 8 மணி நேர வேலை என 24 மணி நேரமும்  ஜெயலலிதாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக்  கொண்ட இவர்களிடம், அவர் பற்றி கூறுவதற்கு பல கதைகள்  இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு  நர்சிங் மேலதிகாரியாக பணிபுரியும் சுனிதா. அவர் ஜெயலலிதா பற்றி கூறுகையில்,
அவருக்கு சேவை செய்துவந்த செவிலியர்களில்  மூவர் மிக முக்கியமானவர்கள்.  ஷீலா CV, ரேணுகா MV மற்றும் சாமுண்டீஸ்வரி. சாமுண்டீஸ்வரியை மேடம்  ‘கிங் காங்’ என்றே அழைப்பார்.  அவர்களது ட்யூட்டி நேரம் கூட அவருக்கு தெரியும்” என்றார்.
 நர்ஷ் ஷீலா கூறியதாவது,

“அவருடன் பணி புரிந்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.  தமிழக முதல்வர்  எங்களை நம்பினார், நாங்கள் டூட்டிக்கு வருகையில்எங்களை சிரித்து வரவேற்றார். அதையெல்லாம் நினைத்து பார்க்கும்பொழுது அது ஒரு இனம்புரியாத உணர்வை தருகிறது.’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில் “அவர் எங்களிடம் மிக அன்பாக இருந்தார். நான் என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள், அவ்வாறே செய்கி றேன் என்பார்.  மிக களைப்பான சமயங்களில், இதை சற்று நேரம் தள்ளி செய்யலாமா என்பார். எதையும் அவர் மறுத்த தில்லை” என்று கூறினார்.
அவருக்கு உடற்பயிற்சி ஆரம்பித்தபொழுது,  விளையாட்டாய் சிறிய பந்துகளை நர்ஸ்கள் மீது எறிவார்.
“வாய் வழியாய் உணவு கொடுக்க ஆரம்பித்தபொழுது, ஒவ்வொரு கவளமும் ஒவ்வொரு நர்ஸுக்காக என சொல்லி நர்ஸ்களின் பெயரைச் சொல்வார்”. என்கிறார் சுனிதா. மற்றும் பழைய ஹிந்தி மற்றும் ஆங்கில பாடல்களை தனது பென் ட்ரைவிலிருந்து அவர் இசைக்க விட்டு மகிழ்வார்.
ரேணுகா:
“இந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள்” என்கிறார் ரேணுகா.  “அவரால் எழுத முடிந்த நாட்களில் தனக்கு தேவையான உணவு மெனுவை அவரே எழுதித்தருவார்.  பொங்கல், உப்மா, தயிர்சாதம் மற்றும் உருளைகிழங்கு ஆகியவை அவருக்கு மிகப் பிடிக்கும்”.  அவருக்காய் தனி சமையலறை கூட இங்கு உண்டு.  அவரது சமையல்காரர் சில நேரங்களில் இங்கு வந்து சமைப்பார்”.
சில நேரங்களில் அவர் இந்த உணவு குறித்து கேலி செய்தபடி, நல்ல தேனீர் அருந்த இவர்களை கொடநாட்டிற்கு அழைத்துள்ளார்.  அதுமட்டுமின்றி, இவர்களை அவர் சட்டசபைக்கு ஒரு முறை வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
டாக்டர்களிடமும் அவர் மிக அன்பாக இருந்தார், முக்கியமாக பெண் டாக்டர்களிடம் அவர் அதிகமாக அளவளாவினார்.
ஜெயலலிதா குறித்து, பேசிய அப்பல்லோவின் மருத்துவ இயக்குனர்  சத்தியபாமா, “ஒரு முறை,  டாக்டர் ஒருவரிடம்  உங்களது முடி அலங்காரத்தை மாற்றினால்  நீங்கள்  மேலும் அழகாக இருப்பீர்கள் என கூறியுள்ளார்.
இதை சொல்லிவிட்டு விளையாட்டாக – நான் முதலமைச்சர் என்ற முறையில் இதை ஆணையிடுகிறேன் என்றார்”.
“மற்ற பெண் மருத்துவர்களிடம், அவர்களது குடும்பம் பற்றி, வேலை நேரம் பற்றி, எவ்வாறு அவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் வேலைக்கு வருகிறார்கள் என்றும் கேட்டுக்கொள்வார்.
தனது உடல் நலக்குறையோடும், அவர் டாக்டர்களை மரியாதையுடன் அமரச் சொல்வார்.  எனினும் அவர் அறைக்குள் நுழைவதற்கு முன் அனுமதி பெற்று வருமாறும் கூறுவார்”.

“அவர் எப்பொழுதும் தனக்கு அவர்கள் செய்யும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்துகொள்வார்.  இது எதற்கு செய்கிறீர்கள், இது எப்படி உதவும் எனக் கேட்பார்” என்கிறார் ரமேஷ் வெங்கடராமன், அப்பல்லோவின் திவீர சிகிச்சை பிரிவு வல்லுனர்.
லண்டன் டாக்டர் ரிச்சார்ட் பேல் பற்றியும் பிரசித்தமாக பேசப்படும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
முதலமைச்சருக்கு மருத்துவ பணி செய்யும் அனைத்து இளம் பணியாளர்களும் ஒரு விதமான பிரமிப்புடன் அவரை அணுகினர்.  இவர்களை அழைத்த டாக்டர் பேல், அவர் முதலமைச்சராக இருக்கலாம்.  எனினும் இங்கு நீங்கள்தான் என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்தல் வேண்டும் என்றார்.  இது நடந்தது ஜெயலலிதா அவர்கள் இருந்த அறையில்.
பேச முடியாத நிலையில் இருந்த அவர், “நான் தான் இங்கு பாஸ்” என ஒரு பெரிய சிரிப்புடன் சைகையால் சொல்லியிருக்கிறார்.  அனைவரும் மகிழ்ச்சியுடன் சிரித்தனர்” என்று நினவு கூர்கிறார் பாபு ஆப்ரகாம், தீவிர சிகிச்சை பிரிவு வல்லுனர்.
இவை ஒரு சில கதைகள்தான்.  மேலும் பல கதைகள் இங்குண்டு.  மீண்டும் மீண்டும் அவை அப்பல்லோவின் உணவு அறைகளிலும், வார்டுகளிலும், நர்ஸ்களின் ஓய்விடங்களிலும் சொல்லப்படும்.  இன்னும் பல வருடங்களுக்கு இவை மறக்கப்படாமல் பேசப்படும்.
(குறிப்பு: பல்வேறு நாளிதழ்களில் வெளியான செய்திகளின் தொகுப்பே இங்கே பதிவிடப்பட்டுள்ளது )