இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் தர்பார் படத்தின் அப்டேட்…!

தர்பார் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனர் AR முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் 167வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, சுனில் ஷெட்டி, பிரத்தீக் பாபர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ள சந்தோஷ் சிவனை தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தர்பார் படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் AR முருகதாஸ்.

கார்ட்டூன் கேலரி