பிரமாண்டமாய் நடந்த அனம் மிர்சா, அசாருத்தீன் மகன் திருமண வரவேற்பு…!

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை அனம் மிர்சாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அனம் மிர்சாவுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருத்தீனின் மகன் முகமது அசாதுத்தீனுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை அடுத்து ஹைதராபாத்தில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.

பாலிவுட் டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான ஃபரா கான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.நடிகர் ஆசிஷ் சவுத்ரி தனது மனைவி சமிதாவுடன் கலந்து கொண்டார்.

தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான ராம் சரண் தேஜா தனது மனைவி உபாசனாவுடன் கலந்து கொண்டார் .

 

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் சானியா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-