இந்துத்துவ மதவெறியர்களின் உண்மை முகமறிய காணவேண்டிய காணொளி இது
நடராஜன் 
கடந்த சில நாட்களுக்கு முன்னர், மகாராஸ்திரா பூனேயில் சமூக ஆர்வலர் மற்றும் தயாரிப்பாளர் ஆனந்த்பட்வர்தன் இயக்கிய “ராமனின் பெயரில்” எனும் டாகுமென்டரி திரையிடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.சின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
இந்த ஆவணப் படம் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி நடத்திய “ரதயாத்திரை ” யில் துவங்கி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் முயற்சி வரை நடந்த சம்பவங்களை ஆராய்கின்றது.
1991 ல் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் வெளிவந்த ஒரு வருடத்திற்கு பின்னர், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாய் இந்தியாவெங்கும் மதமோதல்களில் அப்பாவி மக்கள்  படுகொலை செய்யப்பட்டனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தபின்  மதவாதம் தலைதூக்கியுள்ள இந்தக் காலக்கட்டத்தில் இந்த ஆவணப்படத்தை பார்த்து இந்திய வரலாற்றில் கருப்புபக்கங்களின் உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்வது அவசியமாகின்றது.
ஒரு மணி நேரம் ஓடக்கூடிய படத்தின் காணோளி கீழே: