guj cm change featured2017 சட்டசபை தேர்தலை எதிகொள்ளும் விதமாக குஜராத் முதலமைச்சரை மாற்றுவது குறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை பா.ஜ.க. நடத்திவருகின்றது.
பல்வேறு கருத்துக் கணிப்புகளும் 2017 தேர்தலில் பாஜக காங்கிரசிடம் தோல்வியுறும் என்று கூறியுள்ள நிலையில் இத்தகைய தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பா.ஜ.க. இந்த செய்தியை மறுத்துள்ளது. காங்கிரஸ் திட்டமிட்டு இந்தவதந்தியை கிளப்புவதாக கூறியுள்ளது.

guj cm 3எனினும், பாஜக வின் நடவடிக்கைகளை உற்று நோக்கிவரும் விமர்சகர்கள் மாற்றம் விரைவில் நடைபெறும் என்று கூறுகின்றனர்.
ஆனந்திபென் ஹரியானா அல்லது பஞ்சாபிற்கு கவர்னராக நியமிக்கப்படுவார் என்றும், அவருக்கு பதிலாக நிதின் பட்டேல் முதல்வராக்கப்படுவார் என்றும் கூறப்படுகின்றது.

மூஒன்று காரணங்கள்:
1. பட்டேல் இட ஒதுக்கீடு:ஆனந்திபென் மோடி பிரதமரானவுடன் அவருக்கு பதிலாக குஜராத் முதல்வராக மோடியால் தேர்வுசெய்யப்பட்டார். எனினும், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் பட்டேல் இட ஒதுக்கீடு கலவரத்தை சரியாக கையாள வில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. இதன் காரனமாகவே உள்ளாட்சிச் தேர்தலொய்ல் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது.

guj cm 12. நில ஊழல்: ஆனந்தி பென்னின் மகள் பங்குதாரராய் உள்ள ஒரு நிறுவனத்திற்கு மிகவும் மலிவான விலையில் குஜராத் அரசு நிலத்தை வழ்ங்கியதாக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு.
3. சமீபத்தில் தண்ணீர் மேலான்மையில் முந்தைய அரசுகள் ( மோடி) செயலற்று இருந்தன என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
4. ஆனந்தி பென் 75 வயதை கடக்க உள்ளார். அதனைக் காரணமாகக் காட்டி அவரை நீக்கலாம்.

5.  மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான பாஜக தலைவர்  ஓம் மாத்தூர் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி  பாஜக வில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவரது சிபாரிசின் படிதான் 10 சதவித இட ஒதுக்கீடு திட்டம் அறிவிக்கப்பட்டது. அவர் ஆனந்தியை மாற்றவேண்டும் என்று சிபாரிசு வைத்துள்ளார்.

guj cm 2இந்நிலையில், ஆனந்தி பென் பிரதமரையும், அடுத்த முதல்வர் என்றழைக்கப்படும் நிதின் படேல் அமித் ஷாவையும் தனித்தனியே சந்தித்து பேசியுள்ளனர். அவர்களது சந்திப்பிற்கு அர்சுமுறைக் காரணம் கூறப்பட்டாலும், நெருப்பில்லாமல் புகையாது என்பது மட்டும் நிஜம்.