தம்பியின் தற்கொலைக்கு ஆனந்தராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

நடிகர் ஆனந்த ராஜின் தம்பி கனகசபை ஏலசீட்டு நடத்திவந்த நிலையில் அதில் ஏற்பட்ட சில குளறுபடியால் தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டமே அவரது தற்கொலைக்கு காரணமாக சொல்லப்பட்டுவந்த நிலையில் இதனை நடிகர் ஆனந்தராஜ் மறுத்துள்ளார்.

தம்பி சமீபத்தில் ஒரு வீடு வாங்கியிருந்தார், அதுசம்பந்தமாக சிலர் அவரை மிரட்டி வந்திருக்கிறார்கள். அந்த மன உளைச்சலில்தான் அவர் ஒரு கடிதத்தில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் .

தனது தம்பியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும்” என ஆனந்த ராஜ் கூறியுள்ளார் .