பெங்களூரு

த்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே தன்னைக் கொல்ல முயற்சி நடந்ததாக தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு மத்திய அமைச்சரான அனந்த குமார் ஹெக்டே தனது பாதுகாப்பு வாகனங்களுடன் கநாடகாவில் பயனம் செய்துக் கொண்டிருந்தார்.   அவர்  ஹவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுக்கா ஹலகிரி அருகே சென்றுக் கொண்டிருந்த போது ஒரு லாரி அவருடைய பாதுகாப்பு வாகனத்தில் மோதி உள்ளது.   இது தன்னைக் கொல்ல நடந்த முயற்சி என் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அனந்தகுமார்

”கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டம் ஹலகிரியில் எனது வாகனம் சென்றுக் கொண்டிருந்த போது தவறாக எதிர்பக்கம் வந்த லாரி எனது பாதுகாப்பு வாகனத்தில் மோதியது.   என் வாகனத்தின் மீது அந்த லாரி மோத முயன்றுள்ளது.   எனது வாகனம் வேகமாக சென்றதால் நான் இந்த தாக்குதலில் இருந்து தப்பினேன்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

                       ஓட்டுநர்

அத்துடன் தனது பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதிய லாரியின் புகைப்படத்தை அதன் பதிவு எண் KA 18 A 8733 என்பது தெரியும் வண்ணம் டிவிட்டரில் பதிந்துள்ளார்.  அத்துடன் அவரது பாதுகாப்பு வாகனஹ்தையும் பதிவிட்டு. தவறான திசையில் தன்னைக் கொல்ல வந்த லாரி மோதியதில் தனது பாதுகாவலருக்கு தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இறுதியாக அனந்தகுமார் தனது டிவிட்டரில் தன் மீது மோதவந்த லாரியின் ஓட்டுனர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  அத்துடன் அந்த ஓட்டுனர் பெயர் நசீர் எனவும் காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தி இந்த விபத்தின் பின்னால் உள்ள சதித் திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்,