காஷ்மீர் ஆனந்த்நாக் பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:

ம்மு- காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படை வீரர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட பகுதியை சுற்றி  வளைத்தனர்.

இதன் காரணமாக பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர்மீது தாக்குதல் நடத்தி தப்பிக்க முயன்றனர். ஒருசில மணி நேரமாக நடைபெற்ற துப்பாக்கி சண்டைக்கு பிறகு, பயங்கரவாதிகள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் யாரும் பதுங்கி உள்ளார்களா என தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.