விஜய் தேவரகொண்டாவுக்கு நாயகியாகிறார் அனன்யா பாண்டே…!

‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தை தொடர்ந்து பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா.

இந்தப் படத்தை கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், சார்மி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தில் தேவரகொண்டாவுக்கு நாயகியாக முன்னணி இந்தித் திரையுலக நாயகியான அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா இந்தியிலும், அனன்யா பாண்டே தமிழ் மற்றும் தெலுங்குடத் திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.