அன்பழகன் மரணம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை:

பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவையொட்டி அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

வயது முதிர்வு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிர்யிழந்தார்.

அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக மூத்த நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.