2நாளில் வீடு திரும்புவார் அன்பழகன்: ஸ்டாலின்

சென்னை:

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 2 நாளில் வீடு திரும்புவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த சில நாட்களாக உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த 19ந்தேதி அன்று அவரது பிறந்தநாளைக்கு கூட யாரும் வாழ்த்து தெரிவிக்க வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு  உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று இரவு திமுக தலைவர்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. ஆகியோர் அப்போலோவுக்கு விரைந்தனர். அங்கு அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தனர்

அடிதத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு சளித்தொல்லை காரணம். அவருக்கு மார்பில் தொற்று ஏற்பட்டுள்ளதால் சளித் தொந்தரவு அதிகமாகி உள்ளது. இதனால் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். இன்னும் இரண்டு நாளில் வீடு திரும்புவார் என்று கூறினார்.