இன்று அன்பழகன் பிறந்தநாள்: திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:

ன்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி, அவருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு இன்று 97-வது பிறந்த நாள். இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றே அவரது கீழ்ப் பாக்கம் இல்லத்திற்கு சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பிறந்த நாள்வாழ்த்து கூறியபோது எடுத்த படம்

கஜா புயல் பேரிடரை கருதி தனது பிறந்த நாள் கோலாகலங்கள் வேண்டாம் என்றும், நேரில் யாரும் வர வேண்டாம் என்றும் அவர் அறிவித்திருந்த நிலையில், நேற்றே ஸ்டாலின் சென்று வாழ்த்து கூறியிருந்தார்.

மேலும்,  முதுமை காரணமாகவும், தொண்டை தொற்று காரணமாகவும் அவர் பேச சிரமப்படும் நிலையில், அன்பழகனின் வேண்டுகோளை ஏற்கும்படி  மு.க.ஸ்டாலி னும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

மேலும்,  ’97 வயதிலும் உள்ளத்தில் உறுதி குறையாமல் உற்சாகம் தளராமல் செயல்படுகிறார் அன்பழகன்’ என்றும் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.