அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை:
பேராசிரியர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பேராசிரியர் க.அன்பழகன் கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார்.

இந்நிலையில், திமுக முன்னாள் பொதுச்செயலாளரும், பேராசிரியருமான க.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனைஒட்டி, கீழ்பாக்கத்திலுள்ள அன்பழகன் வீட்டுக்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், சிறிது நேரம் பேராசிரியர் க.அன்பழகனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி கலந்துரையாடினார்.