அண்ணாநகர் மின் மயானத்தில் அன்பழகன் உடல் தகனம்

சென்னை

சென்னையில் அண்ணா நகரில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது.

திமுக பொது செயலாளரும் அனைவராலும் பேராசிரியர் என அழைக்கப்படுபவருமான அன்பழகன் வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த  24 ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

நள்ளிரவு சுமார் 1 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. அதன்  பிறகு 2 மணிக்கு அவர் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  அங்கு திமுக கொடி போரத்தபட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.  ஏராளமான பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மாலை அன்பழகன் வீட்டில் இருந்து கிளம்பிய இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.  சென்னை அண்ணா நகரில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் நடந்த இறுதிச் சடங்கில் மு க ஸ்டாலின், துரைமுருகன், டி ஆர் பாலு, தயாநிதி மாறன் மற்றும் பல தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.   அதன் பிறகு அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.