சென்னை:

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீ ஸ்டிக்கர் ஒட்டிய பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்ட ஏராளமான பா.ம.க.வினர் இன்று கைது செய்யப்பட்டனர்.

மதுக்கடைகளை அகற்றுவது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசைக் கண்டிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சென்னையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விளக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் பாமக இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது.


இதன்படி இப்போராட்டத்தை இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் துவங்கிவைத்தார்.  அவருடன் முன்னாள் அமைச்சர் மூர்த்தி,  வழக்கறிஞர் பாலு உட்பட ஏராளமான பா.ம.க.வினர் கலந்துகொண்டணர்.  டாஸ்மாக் கடைகளின் பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதே போல பாமக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் குன்னத்தில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை விளம்பர பலகையின் மேல் சட்ட விரோத மதுபான கடை என ஸ்டிக்கர் ஒட்டினர். இதேபோல் செஞ்சி, ஆண்டிமடம் பகுதிகளிலும் பாமகவினர் டாஸ்மார்க் கடை போர்டு மீது ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்தினர்.

இவர்களையும் காவல்துறை கைது செய்தது.