காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அன்புமணி 3 நாள் பிரசாரம்!

--

சென்னை,

த்திய அரசு காவிரி மேலண்மை வாரியம் உடனே அமைக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மூன்று நாள் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஒகனேக்கல் முதல் பூம்புகார் வரை 412 கிமீ மூன்று நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி விடுத்துள்ள அறிக்கையில்,  காவரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி விழிப்புணர்வு பரப்புரை பயணம் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

வரும்  28ம் தேதி காலை விழிப்புணர்வு பிரசார பயணம்  ஒகனேக்கலில்  தொடங்கி பெண்ணாகரம் , மேச்சேரி ,மேட்டூர் , கொடுமுடி வழியாக ஈரோட்டில் நிறைவு பெறுகிறது.  அன்று இரவு ஈரோட்டில் நடைபெறும் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து  29ம் தேதி கரூர் மாவட்டம் நொய்யலில் பிரச்சார பரப்புரையை தொடங்கி வேலாயுதம்பாளையம் , வாங்கல் , புலியூர் , கிருட்டிராயபுரம் , குளித்தலை , முசிறி வழியாக சமயபுரத்தில் நிறைவு செய்கிறார். அன்று இரவு திருச்சி மாநகரத்தில் நடைபெறும் பொதுக்கூட் டத்தில் உரையாற்றுகிறார்.

3வது நாளாக 30ம் தேதி காலை கல்லணையில்  தன பயணத்தை தொடங்கும் அன்புமணி, அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி , திருவையாறு , கும்பகோணம் , கதிராமங்கலம் ,மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் நிறைவு செய்கிறார்.  அன்று இரவு அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் சிறப்பு ஆற்றுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.