அன்புமணி நலம்!

சென்னை:

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை திடீரென அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. அவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் நலமோடு இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர். வழக்கமாக ஆண்டு தோறும் செய்யும் மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சோதனை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நெஞ்சுவலி என்பது தவறான தகவல் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.