சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியின் தலைமை அலுவலகத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனது ஆண்டாள் அழகர் கல்லூரியையும் கொரோனா வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமீபத்தில் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்தின் கோரிக்கையை ஏற்று, ஆண்டாள் அழகர் கல்லூரியை கொரோனா வார்டாக மாற்றுவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டாள் அழகர் கல்லூரியையும், தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்திக்கொள்ள விடுத்த வேண்டுகோளை ஏற்று,
இன்று (08/04/2020 ) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான், DRO திருமதி. பிரியா, செங்கல்பட்டு SP திரு. கண்ணன், மதுராந்தகம் DSP திரு. கந்தன், செங்கல்பட்டு RDO திரு. செல்வம், மதுராந்தகம் RDO திருமதி. லட்சுமி, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை ஆய்வு செய்தனர்.

தற்போது கல்லூரி விடுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

எனது வேண்டுகோளை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.