வெளியானது ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் ‘அண்டாவ காணோம்’ படத்தின் டீஸர்….!

திமிரு, காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் விஷால் அண்ணனின் மனைவியுமான ஸ்ரேயா ரெட்டி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும்

கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆகி நடித்துள்ள படம் “அண்டாவ காணோம்”.

வேல்மதி இயக்கியுள்ள இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.

இதற்கு ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளராக சத்யராஜ் நடராஜன், கலை இயக்குநராக ஏ.கே.முத்து, பாடலாசிரியராக மதுரகவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தை ‘JSK ஃபிலிம் கார்ப்பரேஷன்’ நிறுவனம் ஜே.சதீஷ் குமாருடன் இணைந்து ‘லியோ விஷன்’ நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளார்.

சுமார் 3 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி இந்த படம் OTT தளத்தில் வெளியாகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். மேலும், விஜய் சேதுபத்தி இப்படத்தில் அண்டாவாக நடித்து அதற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி