600 விக்கெட்டுகள் என்ற மைல்கல் – ஆண்டர்சனுக்கு தேவை வெறும் 2 விக்கெட்டுகள்!

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டுவதற்கு, இங்கிலாந்தின் மூத்த பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இன்னும் 2 விக்கெட்டுகள்தான் தேவை.

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தற்போது ஆடிவருகிறது இங்கிலாந்து. இத்தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார் மூத்த வீரர் ஆண்டர்சன்.

மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலூ 5 பாகிஸ்தான் விக்கெட்டுகளை சாய்த்து, அந்த அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆவதற்கு காரணமாக இருந்தார் ஆண்டர்சன்.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் ஏற்கனவே சாய்த்திருந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், தற்போது 600 விக்கெட்டுகள் என்ற ஒரு புதிய சாதனையை எட்ட வேண்டுமெனில் அவருக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு அந்த விக்கெட்டுகள் கிடைத்தால், உலகில் அச்சாதனையை செய்திருக்கும் மிகச்சில வீரர்கள் பட்டியலில் ஆண்டர்சனும் இடம்பெறுவார்.