‘அந்தாதூன்’ தெலுங்கு ரீமேக்கின் முழுப் பட்டியல்…..!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதுன்’.

வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக்காவது குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது .

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தாதூன்’ படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தபு. அதில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளராக மஹதி ஸ்வர சாகர் மற்றும் ஒளிப்பதிவாளராக ஹரி கே வேதாந்த் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

மெர்லபாகா காந்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை தாகூர் மது வழங்க சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.