பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அந்தகாரம்’. அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாரானபோது கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியது.

இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ‘அந்தகாரம்’ படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது.

கைதி,மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை விக்னராஜன் இயக்கியுள்ளார்.பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் Netflix தளத்தில் வரும் நவம்பர் 24ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த படத்தின் மியூசிக்கல் டீஸர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.