லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கைதி படத்தில் வில்லன் அர்ஜூன் தாஸ் தற்போது அந்தகாரம் எனும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அப்படத்தை விக்னராஜன் இயக்குகிறார்.

இந்த படத்தை அட்லீயின் ஏஃபார் ஆப்பிள் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது .

சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகவுள்ள இந்த படத்தில் அர்ஜூன் தாஸ்ஸுடன் வினோத் கிஷன், பூஜா, குமார் நடராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர் .