ஆந்திரா, காஷ்மீர் பாஜக தலைவர்கள் மாற்றம்

ஐதராபாத்:

ஆந்திரா பா.ஜ.க. தலைவராக விசாகப்பட்டிணம் எம்.பி. ஹரிபாபு இருந்து வந்தார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் கண்ணா லக்‌ஷ்மிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பா.ஜ.க.வில் இணைந்தார். ஆந்திரா பா.ஜ.க. தேர்தல் கட்டுப்பாடு கமிட்டி தலைவராக சட்டமன்ற மேல்சபை உறுப்பினர் சோமு வீர்ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவராக சட் சர்மா இருந்து வந்தார். இந்நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவராக ரவிந்திர ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரவிந்தர் ரெய்னா மத்திய வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார். இவர் ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க இளைஞர் அணி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது