உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி இந்தியாவில் தொழில் துவங்க ஏற்ற மாநிலங்களாக ஆந்திராவும் தெலுங்கானாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு குஜராத்தை பின்னுக்கு தள்ளி இரு மாநிலங்களும் முதலிடத்தை பெற்றுள்ளன.

andra_telengana

இத்தகவலை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். 340 புள்ளிகளை அடிப்படையாக கொண்ட தொழில் சீர்திருத்த செயல் திட்டங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் ஆந்திராவும் தெலுங்கானாவும் 98.78 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளன.
இதற்கு முன்பு முதலிடத்திலிருந்த குஜராத் 98.21 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், சட்டீஸ்கர் 97.32 சதவிகிதத்துடன் நான்காவது இடத்திலும், மத்திய பிரதேசம் 97.07 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. டாப் 10 வரிசையிலுள்ள மாநிலங்களின் பட்டியல் பின்வருமாறு:
1. ஆந்திரா மற்றும் தெலுங்கானா
3. குஜராத்
4. சட்டீஸ்கர்
5. மத்திய பிரதேசம்
6. ஹரியானா
7. ஜார்கண்ட்
8. ராஜஸ்தான்
9. உத்தர்கண்ட்
10.மகாராஷ்டிரா
இந்தியாவில் தொழில் துவங்க ஏற்ற மாநிலங்களின் டாப் 10 வரிசையில் உள்ள 7 மாநிலங்கள் பாரதிய ஜனதா கட்சியால் ஆளப்படுபவை. முதலிடத்தில் உள்ள ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் பிராந்திய கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. ஒரே ஒரு மாநிலம் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமாகும்.
தமிழ்நாடு இப்பட்டியலில் 12வது இடத்திலிருந்து 18-வது இடம் என்ற படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது